×

கூடங்குளம் அணு உலைக்கு தளவாடம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது

ஸ்பிக்நகர், நவ. 22: தூத்துக்குடி அருகே கூடங்குளம் அணு உலைக்கு தளவாடம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. கூடங்குளம் அணு உலைக்கு தேவையான தளவாட பொருட்கள், ரஷ்யாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்டு, லாரிகளில் கொண்டு செல்லப்பட்டது. நேற்று அதிகாலை 2 லாரிகளில் ஒரு லாரிக்கு 8 வால்வுகள் வீதம் ஏற்றப்பட்டு திருச்செந்தூர் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டன. இதில் வள்ளியூரை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த லாரி, அதிகாலை 4.45 மணியளவில் முள்ளக்காடு அடுத்த பொட்டல்காடு விலக்கு பகுதியில் வரும்போது, அங்குள்ள சிப்காட்டுக்கு செல்லக் கூடிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான நீரேற்று நிலைய சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுச்சுவர் மற்றும் கேட் ஆகியவை உடைந்து நொறுங்கியது. சம்பவ நேரத்தில் பணியில் இருந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர், வேறு பகுதியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடத்துக்கு விரைந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

The post கூடங்குளம் அணு உலைக்கு தளவாடம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Kudankulam Nuclear Reactor ,Spiknagar ,Kudankulam ,reactor ,Tuticorin ,Dinakaran ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது